எஸ்கேப் ஆகுறதே வேலையா போச்சு... ஆணையத்துக்கு டிமிக்கி கொடுத்த ஓபிஎஸ்

செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (15:10 IST)
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டு, அது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் என கூறியதும் ஓ.பன்னீர் செல்வம்தான். 
 
இந்நிலையில் இந்த ஆணையத்தின் விசாரணை முடிவடைய உள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வத்திடம் விசாரணை நடந்த அவரை அழைத்தது. ஆனால், அவர் இன்றுவரை விசாரணைக்கு செல்லாமல். ஒத்துழைப்பு அளிக்காமல் உள்ளார். 
 
முதலில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு பணிகள் இருக்கின்றன அதனால் ஆஜராக முடியாது என்று கூறி அலைகழித்து வந்தார் அவர். இன்று அவர் ஆணையத்தின் முன் ஆஜாராகி இருக்க வேண்டும். ஆனால், இன்றும் அவர் ஆஜார் ஆவதாக தெரிவில்லை.
 
அதாவது, வரும் 8 ஆம் தேதி தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. ஆகவே பட்ஜெட் குறித்த பணிகள் இருப்பதால் அவர் இன்றும் ஆஜராவதற்கு வாய்ப்புகள் குறைவு என கூறப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்