சிஎஸ்கே- பெங்களூரு போட்டி மழையால் பாதிக்க வாய்ப்பு? போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

Siva
திங்கள், 13 மே 2024 (07:48 IST)
பெங்களூரு அணி நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டிருப்பதால் அடுத்த போட்டி பெங்களூர் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இந்த போட்டி இரு அணிகளுக்கு மிகவும் முக்கியமான போட்டி என்றும் சிஎஸ்கே அணி ஏற்கனவே 14 புள்ளிகள் பெற்றுள்ளதால் அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் எளிதில் பிளே ஆப் சென்றுவிடும் என்றும் ஆனால் பெங்களூர் அணி தற்போது 12 புள்ளிகளுடன் உள்ளதால் அதிக ரன் ரேட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மே 18ஆம் தேதி சென்னையில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை அடுத்து அன்றைய தினம் மழை வந்து போட்டி ரத்தானால் இரு அணிகளுக்கும் தல ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்படும் என்பதால் சென்னை அணி எளிதாக உள்ளே சென்று விடும. ஆர்சிபி அணி வெளியேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் மழை நின்று குறைந்த ஓவர்களில் போட்டி ஆரம்பிக்கப்பட்டால் அதன் பிறகு அந்த போட்டியின் முடிவை அடுத்து அடுத்த சுற்று செல்லும் அணி எது என்பது முடிவு செய்யப்படும்

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்