சச்சினுக்கு இது தெரியவில்லை – கபில்தேவ் விமர்சனம்…

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (21:30 IST)
உலகின் தலைசிறந்த பேட்ஸ் மேன்களான  டான்பிராட் மேன்,ரிச்ச்ர்ட்ஸ் , கவாஸ்கார் ஆகியோருக்குப் பின் இந்திய கிரிக்கெட் அணி பேட்ஸ்மேன் சச்சின்  மாஸ்டர் பிளாஸ்டர், இந்திய கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில்  இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பை வென்று கொடுத்த ஆல்ரவுண்டரும் முன்னாள் கேப்டனுமான கபில்தேவ், சச்சினை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

அதில், சச்சின் 6 முறை இரட்டைச் சதங்களை எடுத்திருக்கிறார். அவர் இரட்டைச் சதத்தில் 248 ரன்களை எடுத்துள்ளார். ஆனால் 250 ரன்கள் எடுக்கவில்லை. ஆனால் அவர் 3 முச்சதங்களும் 11 இரட்டை சதங்களும் அடித்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் கேப்டன் சங்ககாரா 11 முறை இரட்டை சதங்கள் அடித்துள்ளார்.  தலைசிறந்த பேட்ஸ் மேன் லாரா 9 முறை  இரட்டை சதங்கள் அடித்துள்ளார்.  இதில் லாரா, 375, 400, 500 ரன்கள் தனியாளாக அடித்துச் சாதித்துள்ளார். இந்திய வீரர் ஷேவாக் 6 இரட்டைச் சதங்களும் 3 முச்சதங்களும் அடித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

சிறு வயதிலேயே 15 வயதில் இந்திய அணிக்காக களமிறங்கிய சச்சின் பற்றி கபில்தேவ் இந்தக் கருத்தை முன்வைத்த போதிலும் சச்சினிடம் அசாத்திய திறமை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் கபில்தேவ்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்