இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அபாரமாக விளையாடி 587 ரன்கள் குவித்தது. குறிப்பாக, கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரைத் தவிர, ஜடேஜா 89 ரன்களும், ஜெய்ஸ்வால் 87 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து, இங்கிலாந்து அணி தற்போது தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் நிலையில், 5 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது.
இருப்பினும், ஸ்மித் மற்றும் புரூக் அபாரமாக விளையாடி வருகின்றனர். ஸ்மித் 84 ரன்களுடனும், புரூக் 71 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.