உலகக்கோப்பையை வென்ற பிறகே திருமணம் – ரஷீத் கானைக் கேலி செய்யும் நெட்டிசன்ஸ்!

திங்கள், 13 ஜூலை 2020 (11:13 IST)
ஆப்கானிஸ்தான் அணியின் இளம் வீரரான ரஷித் கான் தங்கள் அணி உலகக்கோப்பையை வென்றபிறகுதான் திருமணம் செய்துகொள்வேன் என அறிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியின் சுழல்பந்து வீச்சாளரான ரஷித்கான் மிகக்குறைந்த வயதிலேயே உலகளவில் சிறந்த பந்துவீச்சாளர் என்ற சாதனைகளை நிகழ்த்திக் கொண்டு வருகிறார். சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் மிகக்குறைந்த வயது மற்றும் போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். தற்போது ஆப்கான் அணியின் ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டனாக இருந்துவரும் அவரின் திருமணம் எப்போது என நேர்காணல் ஒன்றில் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த 21 வயது ரஷித்கான் ‘முதலில் ஆப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பையை வெல்லட்டும். அதன் பின்பே என் திருமணம்.’ எனக் கூறினார். ஆப்கான் அணி உலகக் கிரிக்கெட் அரங்கில் கத்துக்குட்டி அணிதான். கடந்த ஆண்டுதான் உலகக்கோப்பை தகுதிச்சுற்றுகளில் தேறி உலகக்கோப்பையிலேயே நுழைந்துள்ளது. அதற்குள் கோப்பைக் கனவா என பலரும் ரஷித்கானை கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்