இந்திய அணியின் நட்சத்திர வீரரான பும்ரா, பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக உள்ளார். ஆனால் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் மற்றும் முதுகுவலிப் பிரச்சனைகள் காரணமாக அவரால் தொடர்ந்து போட்டிகளில் விளையாட முடியவில்லை. அவரது காயங்களுக்குக் காரணம் அவரின் தனித்துவமான பந்து வீசும்முறைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பும்ராவின் காதல் மனைவி அவர் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “நாங்கள் இருவரும் காதலித்துக் கொண்டிருந்த போது பும்ரா என்னிடம் வந்து “நம் கல்யாணத்துக்கு என் வீட்டில் சம்மதிக்கவில்லை என்றால் நாம் ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்ளலாமா?” எனக் கேட்டார். நான் அவரிடம் “நீ பந்து வீசவே ஓட மாட்டாய். இதில் எங்கிருந்து ஓடிப்போய் கல்யாணம் செய்வது என்று?” என நக்கலாக சொன்னேன்” என தெரிவித்துள்ளார்.