350 - 500 சதவீத சம்பள உயர்வு: இந்திய அணி வீரர்கள் குஷி...

Webdunia
வியாழன், 8 மார்ச் 2018 (16:40 IST)
பிசிசிஐ இந்திய அணி வீரர்களின் பட்டியலையும், வீரர்களுக்கான கிரேட் மற்றும் ஊதிய ஒப்பந்தங்கள் குறித்து அறிவித்துள்ளது. மேலும், A+ கிரேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
இதுவரை A, B, C என 3 பிரிவுகள் மட்டுமே இருந்தது, தற்போது A+ கிரேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கிரேடில் ஐந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவன், புவனேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா A+ கிரேட் அந்தஸ்துடன் ரூ.7 கோடி சம்பளம் பெறவுள்ளனர். 
 
A பிரிவில் தோனி, அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, முரளி விஜய், புஜாரா, அஜிங்க்ய ரஹானே, விருதிமான் சாஹா ஆகிய ஏழு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ரூ.5 கோடி சம்பளம் அளிக்கப்படும். 
 
B பிரிவில் கே.எல்.ராகுல், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், சாஹல், ஹர்திக் பாண்டியா, இசாந்த் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ரூ.3 கோடி அளிக்கப்படும். 
 
C பிரிவில் கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டே, அக்சர்படேல், கருண் நாயர், சுரேஷ் ரெய்னா, பார்தீவ் படேல், ஜெயந்த் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஒரு கோடி வழங்கப்படும். 
 
கணக்கு படி  A+ கிரேட் வீரர்களுக்கு 350% அதிக சம்பளமும், A கிரேட் வீரர்களுக்கு 500% அதிக சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்