இந்த போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்கிய கருண் நாயர் மிகச்சிறப்பாக ஆடி 40 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்தார். இவர் களத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது அவருக்கும் பும்ராவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு காரசாரமான விவாதம் நடந்தது. கருண் ரன் எடுக்க ஓடும்போது பும்ரா மேல் மோதிவிட்டதால் பும்ரா அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆறாவது ஓவர் முடிந்தபின்னர் டைம் அவுட்டின் போதும் பும்ரா கோபமாகக் காணப்பட்டு கருணிடம் ஏதோ சீற, அருகில் இருந்த வீரர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். கருண் நாயர், மும்பை கேப்டனிடம் தன் தரப்பு விளக்கத்தை அளித்தார். இது அனைத்தையும் விட இந்த கார சார வாக்குவாதத்தின் போது மும்பை அணி பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மா சண்டையை ஜாலியாக ரசிப்பது போல சிரித்துக் கொண்டே கொடுத்த ரியாக்ஷன்தான் தற்போது வைரலாகி வருகிறது.