இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார், முதலில் பந்துவீச முடிவு செய்தார். அணியின் வெற்றிப் பாதைக்கு திரும்பும் நோக்கத்தில், பெங்களூரு அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
மறுபக்கம், கடந்த போட்டியில் குஜராத் அணியிடம் தோல்வியடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ், தற்போது வனிந்து ஹசரங்காவைக் களமிறக்கி அணிக்கு மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. இரு அணி வீரர்களின் விவரங்கள் இதோ:
ராஜஸ்தான் ராயல்ஸ்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரன் ஹெட்மயர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகீஷ் தீக்ஷனா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
பிலிப் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா, டிம் டேவிட், க்ருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா, யாஷ் தயாள்.