என்ன ஆச்சு கிங் கோலிக்கு?.... போட்டிக்கு இடையில் மூச்சு வாங்கி திணறல்!

vinoth

திங்கள், 14 ஏப்ரல் 2025 (09:54 IST)
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 173 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி அந்த இலக்கை ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 18 ஆவது ஓவரில் எட்டியது. இந்த போட்டியில் பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஃபில் சால்ட் மற்றும் கோலி ஆகியோர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர். கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து போட்டியை நிறைவு செய்தார்.

இந்த போட்டியின் போது 15 ஆவது ஓவரில் ஷாட் அடித்துவிட்டு இரண்டு ரன்கள் எடுக்க விராட் கோலி ஓடினார். அந்த இரண்டு ரன்களை முடித்த பின்னர் அவர் மூச்சுவாங்கி சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் அருகில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனிடம் “என்னுடைய இதயத் துடிப்பைப் பாரு” என சொல்ல அவர் கோலியின் நெஞ்சில் கைவைத்து பார்த்துவிட்டு “அது சரியாக உள்ளது” என்று சொல்ல அதன் பின்னர் பேட் செய்தார். வழக்கமாக வேகமாக ரன் எடுக்கும் திறன் கொண்ட கோலியே இப்படி மூச்சு வாங்கியது அவரது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆனால் சிலர் ‘கோலிக்கு இப்போது 36 வயதாகிறது. அதனால் அவர் இன்னும் பழைய இளம் கோலி இல்லை” என்றும் தெரிவித்து வருகின்றனர்.

Kohli asking Sanju to check his heartbeat? What was this ???? pic.twitter.com/2vodlZ4Tvf

— Aman (@AmanHasNoName_2) April 13, 2025

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்