கரூர் கூட்டநெரிசல் பலி விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள எஸ்ஐடி குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அஜய் ரஸ்தோகி தற்போது ட்ரெண்டாகியுள்ளார்.
கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியானார்கள். இந்த விவகாரம் குறித்த வழக்குகள் நடந்து வரும் நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மேலும் சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இவரது குழு அளிக்கும் விசாரணை அறிக்கையே உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்குக் குறித்த மிகமுக்கியமான ஆவணமாக கருதப்படும் என்பதால், விஜய் மற்றும் தவெகவிற்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
அஜய் ரஸ்தோகி யார்?
ராஜஸ்தானை சேர்ந்த அஜய் ரஸ்தோகி 2004 முதல் 2018 வரை ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 2018ல் திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதியாக 2018ல் பதவி உயர்வு பெற்ற ரஸ்தோகி 2023 வரை நீதிபதியாக பணிபுரிந்தார்.
இந்த காலக்கட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தீர்ப்பு, திருமணத்தை மீறிய உறவுகளை குற்றமாக அறிவித்த உத்தரவு, கருணைக்கொலை உரிமைக்கு ஆதரவான தீர்ப்பு என பல முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
Edit by Prasanth.K