கரூர் துயர சம்பவ விவகாரம்: இன்னொரு தவெக மாவட்ட செயலாளர் கைது.. நீதிபதியை விமர்சித்தாரா?

Siva

ஞாயிறு, 12 அக்டோபர் 2025 (16:41 IST)
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற கரூர் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த விபத்து குறித்த வழக்கு அக்டோபர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அவர் தவெக மீதும் விஜய் மீதும் கடும் விமர்சனம் வைத்தார். "இது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு. இந்த சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். கட்சியின் தலைவருக்கு தலைமைத்துவ பண்பே இல்லை," என்று அவர் தெரிவித்தார்.
 
இதனைத் தொடர்ந்து, தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் நீதிபதியை விமர்சித்தனர். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நீதிபதியை விமர்சிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
 
இந்நிலையில், தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமார், முதலமைச்சர் மற்றும் நீதிபதி குறித்து அவதூறான பதிவுகளை வெளியிட்டதாக சாணார்பட்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஆளுங்கட்சியான தி.மு.க.வுக்கும், தவெகவுக்கும் இடையிலான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்