அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் “ஒரு கோமாளியைக் கோமாளி போல நடிப்பதற்காக விமர்சிக்கக் கூடாது. நம்மை நாமேதான் சர்க்கஸுக்கு சென்றதற்காக குறை சொல்லிக் கொள்ள வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் விஜய் கரூர் சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் விவாதத்தையும் பல சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் ஸ்ருதியின் இந்த பதிவு விஜய்யைதான் கோமாளி என்று சூசகமாக விமர்சிப்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.