20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க பாஸ்போர்ட் மதிப்பு குறைவு.. டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேற்றம்..

Mahendran

புதன், 15 அக்டோபர் 2025 (15:18 IST)
ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவின் பாஸ்போர்ட் மடிப்பு முதல் 10 இடங்களில் இருந்து கீழே இறங்கியுள்ளது. லண்டனைச் சேர்ந்த ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் அமெரிக்காவின் பாஸ்போர்ட் 12வது இடத்தை பிடித்துள்ளது.
 
ஒரு பாஸ்போர்ட்டின் வலிமை, விசா இன்றி எத்தனை நாடுகளுக்கு பயணம் செய்யலாம் என்பதை பொறுத்தது. உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளை தரவரிசைப்படுத்தும் பட்டியலில், அமெரிக்காவின் பாஸ்போர்ட் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. 
 
சாதாரணமாக, முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் அமெரிக்கா, தற்போது 12வது இடத்துக்கு சரிந்திருப்பது, கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட முதல் நிகழ்வு ஆகும்.
 
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், குடியேற்ற கொள்கைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருப்பதும், விசா நடைமுறைகளில் கடும் கெடுபிடிகளை கடைப்பிடித்து வருவதுமே இந்த சரிவுக்கு முக்கியக் காரணமாகக்கூறப்படுகிறது. 
 
பாஸ்போர்ட் தரத்தில் முன்னிலை வகிக்கும் நாடுகள்:
 
சிங்கப்பூர், தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. ஜெர்மனி, இத்தாலி, லக்சம்பர்க், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் 4வது இடத்தையும்  ஐந்தாவது இடத்தில் ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, நெதர்லாந்து நாடுகளும் உள்ளன.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்