கரூர் வழக்கில் திருப்பம்.. தாங்கள் எந்த வழக்கையும் தாக்கல் செய்யவில்லை.. செல்வராஜ்

Mahendran

திங்கள், 13 அக்டோபர் 2025 (11:07 IST)
கரூர் துயர சம்பவம் குறித்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தாங்கள் எந்த வழக்கையும் தாக்கல் செய்யவில்லை என செல்வராஜ், சர்மிளா ஆகிய இருவரும் காணொளியில் ஆஜராகி உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கொடுத்தது பெரும் பரபரப்பையும் திருப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
 
மனுதாரர்களுக்கு தெரியாமலேயே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றன என்றும், இது ஒரு மிகப்பெரிய மோசடி என்றும், இதனை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடப்பட்டது.
 
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் சிபிஐ விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்