மண வாழ்க்கை தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனைவி தனது கணவனை சுற்றியே வரக் கூடாது என்று அறிவுறுத்தியதுடன், குழந்தைக்காக கணவன் மனைவி இருவரும் தங்கள் பிடிவாதத்தையும் ஈகோவையும் ஒதுக்கி வைத்துவிட்டு சமரசம் செய்ய முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இந்த தம்பதியினர் 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகளும், மூன்று வயதில் ஒரு மகனும் உள்ளனர். இருப்பினும், 2023 ஆம் ஆண்டு முதல் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தபோது, மனைவி தனது வழக்கை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த சூழலில்தான், நீதிமன்றம் இருவருக்கும் அறிவுரை வழங்கி, குழந்தையின் எதிர்கால நலனை முன்வைத்து பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தியுள்ளது