திமுக அரசை வீட்டுக்கு அனுப்பனும்னா எங்க கூட வாங்க! - விஜய்க்கு அழைப்பு விடுத்த நயினார்?

Prasanth K

திங்கள், 13 அக்டோபர் 2025 (08:07 IST)

நேற்று மதுரையில் பிரச்சார பயணத்தை தொடங்கிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக விஜய்க்கு அழைப்பு விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு சில காலமே உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார பயணத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது பிரச்சார பயணத்தை நேற்று மதுரையில் தொடங்கினார்.

 

அப்போது உரையாற்றிய அவர் “இந்த தேர்தலில் திமுகவை தோற்கடித்து திராவிட மாடல் அரசை வீட்டிற்கு அனுப்பதான் இந்த தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகியுள்ளது. இதன் தலைவர் அண்ணன் இபிஎஸ் அவர்கள். நீங்கள் திமுகவை வெளியேற்ற விரும்பினால் அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைய வேண்டும். இதில் அனைவரும் என்று நான் யாரை சொல்கிறேன் என்பது உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்” என பேசியுள்ளார்.

 

அவர் விஜய்யின் தவெக கட்சிக்குதான் மறைமுக அழைப்பை விடுக்கிறார் என பேசிக் கொள்ளப்படுகிறது. மேலும் கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திலும் பாஜக விஜய்க்கு ஆதரவாக நின்றது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்