கரூரில் ஏற்பட்ட பிரச்சார கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில் இது தொடர்பாக பல வழக்குகள் நடந்து வருகின்றன. இடையே தமிழக அரசு அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தையும் அமைத்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், இந்த விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் குழு அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. விசாரணை குழுவில் 2 ஐபிஎஸ் அதிகாரிகளை இடம்பெற செய்யுமாறும், மேலும் அவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவை வரவேற்றுள்ள தவெகவினர் இனி விசாரணை நியாயமாக நடக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
Edit by Prasanth.K