உக்ரைன் - ரஷ்யா போர் 4 வருடங்களாக நடந்து வரும் நிலையில் அதை புதின் நினைத்திருந்தால் ஒரு வாரத்தில் முடித்திருக்கலாம் என ட்ரம்ப் பேசியுள்ளார்.
உலகம் முழுவதும் பல போர்களை நிறுத்திய ட்ரம்ப் சமீபத்தில் கவனிக்கத்தக்க வகையில் இஸ்ரேல் - ஹமாஸ் போரிலும் அமைதியைக் கொண்டுவந்தார். ஆனால் ரஷ்யா - உக்ரைன் போரில் மட்டும் ட்ரம்ப் எவ்வளவு முயன்றும் அமைதியைக் கொண்டு வர முடியவில்லை.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் பேட்டி ஒன்றில் வேதனையுடன் பேசிய ட்ரம்ப் “ரஷ்ய அதிபர் புதினுக்கும் எனக்கும் நல்ல நட்பு இருந்தாலும் நான் ஏமாற்றமடைந்துள்ளேன். புதின் ஏன் இந்த போரைத் தொடங்கினார் என்றே எனக்கு தெரியவில்லை. அவர் நினைத்திருந்தால் ஒரு வாரத்தில் இந்த போரில் வென்றிருக்கலாம்.
ஆனால் இந்த போரினால் சுமார் 15 லட்சம் வீரர்களை இழந்துள்ளார். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஒரு நாடு இந்தளவு தனது வீரர்களை இழந்துள்ளது. கிட்டத்தட்ட புதின் நிறைய இழந்துவிட்டார்” என வருத்தத்துடன் பேசியுள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நாளை மீண்டும் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் ட்ரம்ப்.
Edit by Prasanth.K