மெரினா கடற்கரையில் குப்பைகளை வீசினால் உடனடி அபராதம்? அதிரடி தகவல்..!

Mahendran
செவ்வாய், 21 ஜனவரி 2025 (10:38 IST)
கடந்த 16ஆம் தேதி காணும் பொங்கலையொட்டி ஏராளமான பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு திரண்டனர். இதனால் அங்கு ஏராளமான குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு எடுத்து விசாரணை செய்து வருகிறது.

இந்த தீர்ப்பாயத்தின் நீதிபதி மெரினா கடற்கரையில் குப்பைகள் தேங்கி கிடப்பது தொடர்பான புகைப்படங்கள் தனது செல்போனுக்கு வந்ததாகவும், பொங்கல் பண்டிகையின் போது மெரினா கடற்கரை குப்பையாக காட்சி அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கடற்கரையை எப்படி பாதுகாப்பது என மக்களுக்கு தெரியவில்லை என்று வேதனையுடன் கூறிய நீதிபதி, "காணும் பொங்கலுக்கு விடுமுறை அளிப்பதால் தானே இவ்வாறு மக்கள் தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர்," என்று கடினமாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையில் குப்பைகளை வீசி செல்பவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் அதிகம் கூடிய தினங்களில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்ப்பாயம் வலியுறுத்தியது.

இதுபற்றி சென்னை மாநகராட்சியும் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்