குப்பைக்கூளமான மெரினா.. காணும் பொங்கல் விடுமுறை இனி ரத்து? - பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை!

Prasanth Karthick

திங்கள், 20 ஜனவரி 2025 (12:38 IST)

கடந்த காணும் பொங்கலன்று மெரினாவில் மக்கள் கூடி குப்பைக் கூளமாக்கியது குறித்து பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

 

 

கடந்த வாரம் போகி தொட்டு, காணும் பொங்கல், வார இறுதி விடுமுறை என தொடர்ந்து 9 நாட்கள் வரை விடுமுறை இருந்ததால் மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வது, சுற்றுலா தளங்களுக்கு செல்வது என பொழுதை கழித்தனர். சென்னையில் ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று மக்கள் மெரினா கடற்கரைக்கு செல்வது வழக்கமாக உள்ளது.

 

ஒவ்வொரு ஆண்டு காணும் பொங்கலுக்கு பிறகும் மெரினா கடற்கரை குப்பைகள் நிறைந்து காணப்படுவதும் வழக்கமாக உள்ளது. இவற்றை அப்புறப்படுத்த ஏராளமான துப்புரவு தொழிலாளர்கள் மெனக்கெட வேண்டியுள்ளது. இந்த ஆண்டும் காணும் பொங்கலுக்கு மெரினாவில் மக்கள் குவிந்த நிலையில் அடுத்த நாள் கடற்கரையே குப்பைக்கூளமாக காட்சியளித்தது.

 

இதுகுறித்து பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்துள்ளதுடன், “காணும் பொங்லன்று மெரினா கடற்கரை குப்பை கூளமாக மாறுவதற்கு மக்கள்தான் காரணம். இதனால் அன்றைய தினம் அரசு விடுமுறையை ரத்து செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரைப்போம்” என எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்