2026 ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்பது விஜய்யின் பகல் கனவு என்றும் அது ஒரு நாளும் நிறைவேறாது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நிலையில், அந்த கட்சி படிப்படியாக வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், அந்த கட்சியின் சந்திக்கும் முதல் தேர்தலிலே ஆட்சியைப் பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக கூறி வந்தாலும், அதிமுக தலைவர்கள் விஜய் கட்சியை விமர்சனம் செய்துக்கொண்டே வந்துகொண்டு இருக்கிறார்கள்.
அந்த வகையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "2026 ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கும் என விஜய் பகல் கனவு காண்கிறார். கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த எம்ஜிஆர் உடன் தன்னை ஒப்பிடுகிறார். ஆனால், விஜய் ஒரு நாளும் எம்ஜிஆர் ஆக முடியாது," என்று தெரிவித்துள்ளார்.