தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் அவருடன் திரிஷா,மன்சூர் அலிகான், அர்ஜூன், சஞ்சய் தத், மிஸ்கின் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இந்த நிலையில், கடந்த ஜூல் 17 ஆம் தேதி விஜய், மக்கள் இயக்கத்தின் சார்பில் கல்வி விழா நடத்தி மாணவ, மாணவிகளை ஊக்குவித்தார்.
இதையடுத்து, காமராஜர் பிறந்த நாளில் இலவச பயிலகம் தொடங்கினார். இந்த நிலையில், இன்று, நடிகர் விஜய்யின் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள #திருக்கடையூர்அபிராமி கோயிலில் காலை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
இதுபற்றி, மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன் டுவிட்டர் பக்கத்தில், தளபதி விஜய்அவர்களின் சொல்லுக்கிணங்க, #மயிலாடுதுறை மாவட்ட செம்பனார் கோவில் ஒன்றியம் #திருக்கடையூர்அபிராமி ஆலயத்தில் வருகைப் புரிந்த பக்தர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்க தலைவர் அவர்களின் ஏற்பாட்டில் இன்று காலை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.!
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அணி தலைவர்கள், செம்பனார் கோவில் ஒன்றிய மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர் என்று தெரிவித்துள்ளார்.