லோகேஷ் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று கோவை சரவணம்பட்டியில் நடைபெற்ற கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழாவில் கலந்துகொண்ட லோகேஷ் கனக ராஜிடம் மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அதில்,ஒரு மாணவர், தளபதியை வைத்து படம் பண்ணிவிட்டீர்கள்…. இனி தல அஜித்தை வைத்து எப்போது படம் பண்ணுவீர்கள்….அது எல்.சி.யுவுக்கும் வருமா என்று கேட்டார்.