சி.எம்.சி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கொரோனா!

Webdunia
ஞாயிறு, 9 ஜனவரி 2022 (13:47 IST)
வேலூரில் பிரபல மருத்துவமனையான சி.எம்.சி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் ஒரே நாளில் 1 லட்சம் பாதிப்புகளை தாண்டியுள்ளது. இதேபோல ஒமிக்ரான் பாதிப்புகளும் அதிகரிக்க துவங்கியுள்ளது. 
 
தமிழகத்திலும் தினசரி கொரோனா பாதிப்பு 2,000 ஆக உள்ள நிலையில் இங்கு இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூரில் பிரபல மருத்துவமனையான சி.எம்.சி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
ஆம், வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் என 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளி மாநிலம், வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு சிகிச்சைக்கான முன்பதிவு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர சிகிச்சைக்கு மட்டும் அனுமதி அளிக்கும் படி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்