ஊரடங்கில் இயங்கும் ஆட்டோ, டாக்சிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை!

ஞாயிறு, 9 ஜனவரி 2022 (12:52 IST)
ஊரடங்கின்போது பொது போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்றாலும் அவசர தேவைகளுக்காக செல்பவர்களுக்கு மட்டும் ஆட்டோ டாக்ஸி அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் ஊரடங்கின்போது இயங்கும் ஆட்டோ மற்றும் டாக்ஸிகளுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். முழு ஊரடங்கின்போது ரயில் மற்றும் விமான நிலையங்களுக்கு செல்லும் பயணிகளிடம் பயண டிக்கெட் நகலை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் காவல்துறை சோதனையின்போது டிக்கெட் நகலை காண்பித்து செல்ல வேண்டும் என்றும் ஒருவேளை போலியான டிக்கெட் நகல் வைத்திருந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது
 
எனவே ஊரடங்கின்போது இயங்கும் ஆட்டோ டாக்சி ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களில் பயணம் செய்பவர்களின் டிக்கெட்டை பார்த்து உறுதி செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்