அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை: பாராட்டி கவிதை எழுதிய வைரமுத்து!

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (19:03 IST)
முன்னாள் தமிழக முதல்வர் மு கருணாநிதி அவர்களுக்கு சென்னை அண்ணா சாலையில் சிலை வைக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று அறிவித்தார் 
 
இந்த அறிவிப்பை அடுத்து தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து கவியரசு வைரமுத்து தனது டுவிட்டரில் கவிதை எழுதியுள்ளார். அந்த கவிதை இதோ: 
 
தமிழ்நாட்டு
அரசியல் நெடுங்கணக்கில்
முன்னெப்போதுமில்லாத
முதல் நிகழ்வு
 
முதலமைச்சராகத்
தலையெடுத்த தனயன்
முதலமைச்சராகிய
தந்தைக்குச் சிலையெடுப்பது
 
எட்டிய தரவுகள் வரை 
இந்தியாவிலும்
இதுவே முதல் என்று தோன்றுகிறது
 
முன்னவர் பின்னவர்
இருவரையும் போற்றுகிறேன்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்