மீட்டர் மீட்டராய் சரியும் உலகம் - வைரமுத்து டுவிட்!!

புதன், 9 மார்ச் 2022 (11:04 IST)
‘போரை நிறுத்துங்கள் புதின்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து டுவிட் செய்துள்ளார்.  வைரமுத்து குறிப்பிட்டுள்ளதாவது, 

 
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 14 நாட்களுக்கும் மேலாக போர் தொடர்ந்து உள்ள நிலையில் உக்ரைனில் சில நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. பல இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களால் மக்கள் பலர் அகதிகளாக அண்டை நாடுகளில் அடைக்கலம் நாடி செல்கின்றனர். 
 
வெளிநாட்டு மக்கள் உக்ரைன் எல்லை வழியாக பிற நாடுகளுக்கு சென்று அங்கிருந்து சொந்த நாடு திரும்பி வருகின்றனர். உக்ரைனில் போர் காரணமாக மக்கள் பலர் உணவு, தண்ணீரின்றி தவிக்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் ‘போரை நிறுத்துங்கள் புதின்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து டுவிட் செய்துள்ளார்.  வைரமுத்து குறிப்பிட்டுள்ளதாவது, 
 
மில்லி மீட்டராய் வளர்ந்த உலகம்
மீட்டர் மீட்டராய்ச் சரியும்
கரும்புகை வான் விழுங்கும்
பகலை இருள் குடிக்கும்
கடல்கள் தீப்பிடிக்கும்
குண்டு விழாத நாடுகளிலும்
ஏழைகளின் மண்பானை உடையும்
ஆயுதம் மனிதனின் நாகரிகம்
போர் அநாகரிகம் போரை நிறுத்துங்கள் புதின் என கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்