இன்று அம்பேத்கருக்கு இன்னுமொரு பிறந்த நாள்: வைரமுத்து கவிதை

வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (14:49 IST)
இன்று அம்பேத்கருக்கு இன்னுமொரு பிறந்த நாள் என கவியரசு வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். 
 
முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று நரிக்குறவ இன குடும்பத்தினருடன் காலை உணவு சாப்பிட்டார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக வரும் நிலையில் இந்த நிகழ்வு குறித்து கவிப்பேரரசு வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் கவிதை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 
 
முதலமைச்சர் வந்தால்
கறிச்சோறு போடுவோம்
என்றார்கள்
 
கறிச்சோறு போட்டு
நாங்கள் வாக்குத் தவறாதவர்கள்
என்று மெய்ப்பித்துவிட்டார்கள்
நரிக்குறவர் இனத்து
நல்ல மக்கள்
 
அதைச் சாப்பிட்டு
நான் நாக்குத் தவறாதவன்
என்று மெய்ப்பித்துவிட்டார்
முதலமைச்சர்
 
அம்பேத்கருக்கு
இன்று
இன்னுமொரு பிறந்தநாள்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்