புதுவையிலும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: எத்தனை நாட்கள்?

Webdunia
ஞாயிறு, 28 நவம்பர் 2021 (19:03 IST)
கனமழை காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை என்றும் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் பள்ளிகள் விடுமுறை என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
அதேபோல் தற்போது புதுவையிலும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு ஒன்றை அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
புதுவையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவித்துள்ளார்
 
கனமழை பெய்து வருவதால் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாகவே இந்த விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்