நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? விடுமுறை? – விரிவான தகவல்கள்!

ஞாயிறு, 28 நவம்பர் 2021 (15:30 IST)
நாளை தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் கனமழை பெய்யும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை உருவாகும் என கணிக்கப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டிணம் உள்ளிட்ட கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகள் செயல்படாது என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்