சாதிச் சண்டையில் முடிந்த விழுப்புரம் கோயில் திருவிழா !

Webdunia
செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (09:10 IST)
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொம்பூர் எனும் கிராமத்தில் நடந்த கோயில் திருவிழாவில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பொம்பூர் என்ற கிராமத்தில் ஒரு சமூகத்தினர் கொண்டாடும் திருவிழா நேற்று இரவு நடந்துள்ளது. இந்நிலையில் மற்றொரு சமூகத்தினர் அந்த மக்கள் தங்கள் தெரு வழியே ஊர்வலம் செல்லக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு திருவிழா நடந்தபோது இரு சமூகத்தினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு, இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டுள்ளனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பாதுகாப்பு பணிகளுக்காக சென்றுவிட்டதால் கடலூர் மாவட்ட எஸ்.பி. சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார்.

கலவரத்தை ஒடுக்கி இப்போது போலிஸார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கிராமத்தைக் கொண்டு வந்துள்ளனர். மேலும் கலவரத்திற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்