விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள திம்மனந்தல் கிராமத்தில் வசிப்பவர் கதிரவன். இவர் அங்குள்ள பகுதியில் நெல் அறுவை இயந்திர ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்த 7 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, அவரை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.