விலையை குறைக்க முடியலை.. இதுல இலவச கேஸ் சிலிண்டரா? – டிடிவி தினகரன் கேள்வி!

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (11:46 IST)
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இலவச கேஸ் சிலிண்டர் வழங்குவதாக அறிவித்துள்ளது குறித்து டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் மநீம, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளையும் அளிக்க தொடங்கியுள்ளன.

இந்நிலையில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள டிடிவி தினகரன் “கேஸ் விலை அதிகரித்தபோது அதை குறைக்க கூட முடியாத அரசு எப்படி இலவச கேஸ் சிலிண்டர் வழங்கும். போலி வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்ற அமமுக விரும்பவில்லை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்