கடந்த ஆண்டு, தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஜய்க்கு அச்சுறுத்தல் எழுந்ததையடுத்து, அவரது பாதுகாப்பு கருத்தில் கொண்டு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதனை அடுத்து, விஜய்க்கு அறிவிக்கப்பட்ட ஒய் பிரிவு பாதுகாப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அவருக்கு 8 முதல் 11 மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உளவுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் தான் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.