டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

Mahendran

வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (17:37 IST)
உலகளாவிய பொருளாதார நிலைமை பற்றிய அச்சத்தினால், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் 5 காசுகள் உயர்ந்து ரூ.85.25 ஆக நிறைவடைந்தது.
 
அமெரிக்க  அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பை நடைமுறைப்படுத்தியதன் விளைவாக, உலக பொருளாதாரத்தில் மந்தநிலை உருவாகலாம் என்ற அச்சம் காரணமாக, இன்று பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்தன.
 
வங்கிகள் இடையிலான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் ₹85.07 என தொடங்கி, வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக ₹84.96 வரை உயர்ந்தது. பின்னர், குறைந்தபட்சமாக ₹85.34 வரை சென்று, இறுதியில் 5 காசுகள் உயர்ந்து ₹85.25 ஆக முடிந்தது.
 
நேற்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 22 காசுகள் உயர்ந்து ₹85.30 ஆக முடிந்த நிலையில் இன்று மீண்டும் 5 காசுகள் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்