நீதிபதி மகனுடன் மோதல்.. பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் கைது..!

Mahendran

வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (15:17 IST)
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக நடிகர் மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆத்திச்சூடி மற்றும் நடிகர் தர்ஷன் இடையே கார் பார்க்கிங் குறித்து பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், தர்ஷன் மற்றும் அவரது நண்பர்கள் நீதிபதியின் மகன் ஆத்திச்சூடி, அவரது மனைவி லாவண்யா மற்றும் மாமியார் ஆகிய மூவரையும் தாக்கியதாக ஜே.ஜே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் காரணமாக, தர்ஷன் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
அதேபோல்,  நீதிபதி மகன், அவரது மனைவி மற்றும் மாமியார் மீது  நடிகர் தர்ஷன் புகார் அளித்துள்ளதாகவும், இந்த புகார்கள் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் தர்ஷன் கலந்து கொண்டார் என்பதும், அதன் பின்னர் 'கூகுள் குட்டப்பா' உள்பட சில திரைப்படங்களில் அவர் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்