தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது பின்வருமாறு...
அசாம் மாநிலத்தில் 126 சட்டமன்ற தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 67 இடங்களிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி 57 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 2 இடங்களிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.