மருத்துவர் கண்காணிப்பில் சசிகலாவுக்கு ஐசியுவில் சிகிச்சை

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2021 (18:35 IST)
தைராய்டு, நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனையால் பாதிகப்பட்டுள்ளதால் சசிகலா தற்போது விக்டோரியா மருத்துவமனையில் உள்ள ஐசியுவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 
நேற்று பெங்களூரு அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சக்கர நாற்காலியில் வைத்து அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் அவருக்கு சிறைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் இரவில் மீண்டும் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து அரவது நலம் விரும்பிகளும் ஆதரவாளர்களும் கேள்வி எழுப்பி அவருக்குப் பாதுக்காப்பு வழங்கவேண்டுமெனக் கோரினர்.

இந்நிலையில்,  தற்போது,  தைராய்டு, நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனையால் பாதிகப்பட்டுள்ள சசிகலாவுக்கு தற்போது விக்டோரியா மருத்துவமனையில் உள்ள ஐசியுவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சசிகலா தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகிறது. மேலும் சசிகலாவுக்கு நுரையீரலில் தீவிரத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்