சசிகலாவுக்கு கொரோனாவா? மூச்சுதிணறலுக்கான காரணம் என்ன??

வியாழன், 21 ஜனவரி 2021 (08:28 IST)
மூச்சுதிணறலுக்கு கொரோனா காரணமாக இருக்குமோ என சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் அவர் வரும் 27 ஆம் தேதி தண்டனை முடிந்து விடுதலையாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்தன. 
 
இதனிடையே திடீரென நேற்று மாலை சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு  கொண்டுசெல்லப்பட்டார். தற்போது அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 
 
இந்நிலையில் மூச்சுதிணறலுக்கு கொரோனா காரணமாக இருக்குமோ என சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதாவது, RAPID பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்ட நிலையில் RT-PCRல் எடுக்கப்பட்ட சோதனையிலும் கொரோனா பாதிப்பில்லை என கண்டறியப்பட்டுள்ளது.  
 
சிறையிலிருந்து விடுதலை ஆக ஒருவாரம் மட்டுமே இருக்கும் நிலையில் திடீரென அவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்