சுற்றுலாத்தளங்கள் 125 நாட்களுக்குப் பிறகு திறப்பு

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (17:42 IST)
தமிழகத்தில் உள்ள சுற்றுலாத்தளங்கள் 125 நாட்களுக்குப் பிறகு நீக்க உத்தரவிட்டுள்ளதால் இதுகுறித்த இணையதளத்தில் பேசு பொருளாகி வருகிறது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரோனா பரவிய நிலையில், அமெரிக்கா, பிரேசில் நாடுகளை அடுத்த இந்தியா அதிக பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. கொரோனா முதல் அலை முடிந்து தற்போது 2 வது அலை பரவிவருகிறது. விரைவில் 3 வது அலை பரவும் அபாயமுள்ளது என அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், மக்கள் கொரொனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டி வருகின்றது.

இந்நிலையில் தமி்ழகத்தில் நாள்தோறும் குறைந்த அளவு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

எனவே, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழகத்தில் ஊரடங்கை  சில தளர்வுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்துள்ளது. அதில், சுற்றுலாத் தங்கள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

உதகையில் ஊரடங்கால் கடந்த 4 மாதங்களாக தாவரவியல் பூங்கா , ரோஜா, பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற தலங்க இன்று  (23 -08-21 ஆம் தேதி) காலை  முதல் திறக்கப்பட்டுள்ளது. அதனால் இங்கு  வரும் சுற்றுலாப் பயணிகள் அரசு விதித்துள்ள கொரொனா வழிமுறைகளைப் பின்பற்றி உள்ளே செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்