நடிகை ரோஜாவின் பதவியை பறித்த ஜெகன் மோகனின் உத்தரவு!

திங்கள், 19 ஜூலை 2021 (10:16 IST)
நடிகை ரோஜா வகித்து வந்த தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரியத்தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

ஒய்.ஆர்.எஸ்.காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்க முக்கியக் காரணமாக இருந்தது நடிகை ரோஜாவின் தீவிரப் பிரச்சாரம் என சொல்லப்பட்டது. இதனால் அவருக்கு அமைச்சரைவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு எந்த துறையும் ஒதுக்கப்படவில்லை.

ஆனால் அவருக்கு தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரியத்தலைவர் என்ற பதவி கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த பதவியும் இப்போது பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜெகன் மோகன் ரெட்டியின் உத்தரவே காரணம் என சொல்லப்படுகிறது. எம் எல் ஏக்கள் வேறு எந்த பதவியும் வகிக்கக் கூடாது என்ற முடிவின் காரணமாக ரோஜாவின் இந்த பதவி பறிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்