ஒரே நாளில் 30 ரூபாய் குறைந்தது.. 100 ரூபாயை நெருங்கி வரும் தக்காளி.. பொதுமக்கள் நிம்மதி..!

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (07:38 IST)
தக்காளி விலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு கிலோ 200 ரூபாய் என விற்பனையான நிலையில் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.  
 
ஹோட்டல்களில் கூட தக்காளி வாங்குவதை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் தக்காளி விலை கடந்த இரண்டு நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது 
 
இந்த நிலையில் நேற்று 150 ரூபாய் என விற்பனையான தக்காளி இன்று ஒரே நாளில் 30 ரூபாய் குறைந்து ஒரு கிலோ 120 ரூபாய் என விற்பனையாகி வருகிறது,. நாளை அல்லது நாளை மறுநாள் 100 ரூபாய் என குறைய வாய்ப்பு இருப்பதாக தக்காளி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
தக்காளி விலை படிப்படியாக இறங்கி வருவது பொதுமக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்