தக்காளியை அடுத்து பூக்களும் விலையும் உயர்வு.. மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.800..!

புதன், 2 ஆகஸ்ட் 2023 (10:29 IST)
தக்காளி விலை ஒரு கிலோ ரூ.150 முதல் 200 வரை விற்பனையாகி வருவது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் தக்காளியை அடுத்து தற்போது பூக்களின் விலையும் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் இன்று பூக்களின் விலை ஒரே நாளில் இரு மடங்கு உயர்ந்துள்ளது  வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மல்லிகைப்பூ விலை கிலோ 400 ரூபாய் என நேற்று வரை விற்பனை செய்து வந்த நிலையில் இன்று திடீரென ஒரு கிலோ 800 ரூபாய் என விற்பனையாகி வருகிறது. 
அதேபோல் முல்லை ஒரு கிலோ 600 ரூபாய் என்றும் பிச்சிப்பூ ஒரு கிலோ 700 ரூபாய் என்று விற்பனை ஆகி வருகிறது. ஆடிப்பெருக்கு காரணமாக பூக்கள் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்