'' 1 டீ வாங்கினால் 1 கிலோ தக்காளி இலவசம்''...டீக்கடைக்கு படையெடுக்கும் மக்கள்

புதன், 2 ஆகஸ்ட் 2023 (19:20 IST)
சென்னை கொளத்தூரில் 1 டீ வாங்கினால் 1 கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படுகிறது.
 
இந்தியா முழுவதும் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்பனையானதாக தகவல் வெளியானது.

கடந்த சில நாட்களில் தக்காளி விற்றே லட்சாதிபதி மற்றும் கோடீஸ்வர் ஆன வியாபாரிகள் பற்றிய தகவல்களும் மீடியாக்களில் வெளியானது.

இந்த நிலையில் நேற்று முதல் தமிழகம் முழுவதும் 500 ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் தக்காளியின் வரத்து இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகமானதை அடுத்து விலை குறைந்துள்ளதாகவும், நேற்று 170 என விற்பனையான நிலையில் இன்று 160 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், சென்னை கொளத்தூரில் ‘வி சாய்’ என்ற டீ கடை சார்பில் இன்று முதல் 3 நாட்களுக்கு மாலை 4 மணியில் இருந்து 6 மணிவரை முதலில் வரும் 300 பேருக்கு 1 டீ வாங்கினால் 1 கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால் கடையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்