டிஎன்பிஎஸ்சி : தமிழ் பாடத்திட்டம் வெளியீடு

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (19:00 IST)
டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்ட  நிலையில் இதற்கான  தமிழ்பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் தமிழக அரசு  தமிழ் நாட்டில் அரசு  வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு கிடைக்கும் பொருட்டு,  தமிழகத்தில் அரசு பணியிடங்களுக்கு நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு முன்பு  தமிழ்மொழித்தாள் தேர்வு முதலில் நடத்தப்படும். அந்தத் தேர்வில் 45 மதிப்பெண்கள் எடுத்து  தகுதி பெற்றால் மட்டுமே, பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தப்படும் என அறிவித்தது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இ ந் நிலையில் இன்று டி.என்.பி.எஸ்.சி   கட்டாய தமிழ்மொழி தகுதி  தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாளை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்