திட்டமிட்டு முறைகேடு நடந்திருப்பது வெட்கக்கேடு! – டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து நீதிமன்றம்!

புதன், 10 நவம்பர் 2021 (18:47 IST)
டிஎன்பிஎஸ்சி முறைகேடு திட்டமிட்டு நடத்தப்பட்டிருப்பது வெட்கக்கேடானது என மதுரை கிளை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் 5,575 தேர்வு மையங்களில் 16 லட்சம் பேர் தேர்வு எழுதினர். வெளியான முடிவுகளில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் நூறு இடங்களுக்குள் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விசாரணையில் முறைகேடு நடந்திருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் விசாரணையில் பேசிய நீதிபதிகள் “தேர்தல்களின்போது ஒரு வாக்குச்சாவடியில் இதுபோல முறைகேடு நடந்ததாக பிரச்னை எழுந்தாலும், தேர்தல் ரத்து செய்யப்படும் சூழலில், இந்த தேர்வு மையங்களில் முறைகேடு நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டும் தேர்வு ரத்து செய்யப்படாதது ஏன்? ” எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் திட்டமிட்டு இதுபோன்ற முறைகேடு நடந்துள்ளது வெட்ககேடானது என கருத்து தெரிவித்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி மீது மக்கள் இழந்த நம்பிக்கையை மீட்டு கொணரும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்ட நீதிபதிகள், சரியான பொறுப்புக்களில் சரியான, நேர்மையான நபர்களை நியமிக்கும் போதே இதுபோன்ற தவறுகள் தவிர்க்கப்படும் என குறிப்பிட்டு வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்