தமிழ்நாட்டில் மழை பாதிப்பு; யாருக்கு எவ்வளவு நிவாரணம்?

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2022 (12:28 IST)
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் நிவாரணம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த 11 மற்றும் 12ம் தேதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பல மாவட்டங்களில் மழைவெள்ளத்தால் குடியிருப்பு பகுதிகள் மூழ்கியதுடன், வேளாண் நிலங்களும் சேதமடைந்தன.

இந்நிலையில் தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் குறித்த விவரங்களை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் மழை காரணமாக குடிசைகள் பகுதி அளவில் இடிந்திருந்தால் ரூ.4,100ம், முழுவதுமாக இடிந்திருந்தால் ரூ.5 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும்.

அதுபோல வீடுகளுக்குள் நீர் புகுந்திருந்தால் ரூ.4,800-ம், கான்கிரீர் வீடுகள் இடிந்திருந்தால் ரூ.95 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்