3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’, 15 மாவட்டங்களில் கனமழை! – வானிலை ஆய்வு மையம்!

வெள்ளி, 11 நவம்பர் 2022 (08:25 IST)
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும், நாளையும் பல பகுதிகளில் அதி கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தற்போது வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகாலை முதலாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை ஆகிய 15 மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்