திருவள்ளூர் எம்.பி ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று: வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாகத் தகவல்!

Webdunia
சனி, 8 ஏப்ரல் 2023 (18:20 IST)
திருவள்ளுவர் எம்பி ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னால் நாடு முழுவதும் 1500 என்ற கணக்கில் தினசரி கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் தற்போது ஐயாயிரத்துக்கும் அதிகமாக உள்ளது
 
தமிழகத்திலும் தினசரி கொரோனா பாதிப்பு 200ஐ தாண்டி உள்ளது. இந்த நிலையில் திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்ட நிலையில் திடீரென அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
தற்போது அவர் டெல்லியில் உள்ள வீட்டில் தற்போது தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் முழுவதுமாக குணமாகியவுடன் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்